பெங்களூருவில் விற்க முயன்ற 56 கிலோ கஞ்சா பறிமுதல்; 8 பேர் கைது

பெங்களூருவில் விற்க முயன்ற 56 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2022-07-13 20:31 IST

பெங்களூரு:

பெங்களூரு பேகூரு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற 8 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நரேஷ் பெகாரா(வயது 47), அக்சய்(35), தபன்குமார்(27), மைசூருவை சேர்ந்த சேக் மஸ்தான்(47), காசீம் ஷெரீப்(39), கந்தே(48), நந்தீஷ்(27), யாசின் பாஷா(30) என்று தெரிந்தது. கைதான ஒடிசாவை சேர்ந்த நரேஷ், அக்சய், தபன்குமார் ஆகிய 3 பேரும் பெங்களூருவுக்கு கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். அந்த கஞ்சாவை பெங்களூரு, மைசூருவை சேர்ந்த வியாபாரிகளுக்கும், தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கும் விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது.

பேகூரு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற போது 8 பேரும் போலீசாரிடம் சிக்கி இருந்தார்கள். அவா்களிடம் இருந்து 56 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.32½ லட்சம் ஆகும். கைதான 8 பேர் மீதும் பேகூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்