கர்நாடக ஐகோர்ட்டுக்கு புதிதாக 5 நீதிபதிகள் நியமனம்- மத்திய அரசு உத்தரவு

கர்நாடக ஐகோர்ட்டிற்கு புதிதாக 5 நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-08-13 17:23 GMT

பெங்களூரு:

கர்நாடக ஐகோாட்டுக்கு புதிதாக 5 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய நீதிபதிகளை, ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவின் பேரில் மத்திய அரசு நியமித்துள்ளது. மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை இந்த உத்தரவை கடந்த 12-ந் தேதி பிறப்பித்தது.

அதன்படி, புதிய நீதிபதிகளாக அனில் பீமாசேன், குருசித்தய்யா பசவராஜ், சந்திரசேகர் மிருதுன்ஜெயா ஜோஷி, உமேஷ் மஞ்சுநாத், சிவசங்கரேகவுடா ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அனில் பீமாசேன் மட்டும் வருகிற 2024-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி வரை நீதிபதியாக பதவி வகிப்பார். மற்ற 4 நீதிபதிகளும் 2 ஆண்டுகள் கர்நாடக ஐகோர்ட்டில் பணியாற்றுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்