பீகாரில் சொந்த கட்சி எம்.எல்.ஏ.வுக்கே அவதூறு நோட்டீஸ் அனுப்பிய பெண் மந்திரி

சொந்த கட்சி எம்.எல்.ஏ.வுக்கே மந்திரி ஒருவர் அவதூறு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பீகார் அரசியலில் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

Update: 2022-09-12 21:44 GMT

பாட்னா, 

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள மந்திரிசபையில் உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை மந்திரியாக இருப்பவர் லேஷி சிங். பர்னியா மாவட்டத்தை சேர்ந்த இவர், சமீபத்தில் மந்திரியாக நியமிக்கப்பட்ட போது, அதே மாவட்டத்தை சேர்ந்த ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த மற்றொரு பெண் எம்.எல்.ஏ.வான பிமா பாரதி, லேஷி சிங் மீது குற்றச்சாட்டுகளை கூறினார். பொதுவெளியில் செய்தியாளர்களிடம் மந்திரியை குறித்து அவதூறாக பேசியது கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிமா பாரதி எம்.எல்.ஏ.விடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு மந்திரி லேஷி சிங் அவதூறு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதை எம்.எல்.ஏ. பிமா பாரதியும் உறுதி செய்துள்ளார். சொந்த கட்சி எம்.எல்.ஏ.வுக்கே மந்திரி ஒருவர் அவதூறு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பீகார் அரசியலில் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்