பாத்திரங்கள் திருட்டு தொடர்பாக அண்டை வீட்டாருடன் சண்டை - மகன்களுடன் கிணற்றில் குதித்த பெண் - ஒருவர் பலி

பாத்திரங்கள் திருட்டு தொடர்பாக அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட சண்டையில் பெண் தனது மகன்களுடன் கிணற்றில் குதித்தார்.

Update: 2023-01-10 17:21 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரை சேர்ந்தவர் பிரீத்தி (வயது 35). இவருக்கு அனுஷ் பிரதாப் (வயது 9), அபே பிரதாப் (வயது 5) என 2 மகன்கள் உள்ளனர்.

இதனிடையே, வீட்டில் உள்ள பாத்திரங்கள் திருட்டு தொடர்பாக அண்டை வீட்டாருடன் கடந்த 3 நாட்களுக்கு முன் பிரீத்தி சண்டையிட்டுள்ளார். இந்த சண்டை தொடர்பாக பிரீத்திக்கும் தனது குடும்பத்தினருடன் இடையே பிரச்சினை நிலவி வந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மன உளைச்சலில் இருந்த பிரீத்தி தனது 2 மகன்களை கிராமத்தில் உள்ள கிணற்றுக்குள் தள்ளிவிட்டு தானும் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இது குறித்து அறிந்த கிராமத்தினர் கிணற்றுக்குள் குதித்து பிரீத்தி, அவரது 2 மகன்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், கிணற்றுக்குள் குதித்ததில் பிரீத்தியின் இளைய மகன் அபே பிரதாப் உயிரிழந்துவிட்டான். பிரீத்தியும், மூத்த மகன் அனுஷ் பிரதாபும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்