ரூ.2,000 நோட்டு வாபஸ் பணி, சிக்கல் இன்றி நடக்கும்-ரிசர்வ் வங்கி கவர்னர் உறுதி
ரிசர்வ் வங்கியால் வாபஸ் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக்கொள்ளும் வசதி நேற்று முன்தினம் தொடங்கியது
புதுடெல்லி,
ரிசர்வ் வங்கியால் வாபஸ் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக்கொள்ளும் வசதி நேற்று முன்தினம் தொடங்கியது.இந்நிலையில், நேற்று இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கலந்துகொண்டார். அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
2,000 ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பான அனைத்து பணிகளும் சிக்கலின்றி நடக்கும். அதுதொடர்பாக ஏற்கனவே ஆய்வு செய்துள்ளோம்.இதுவரை எந்த பெரிய பிரச்சினையும் இல்லை. ரிசர்வ் வங்கி வழக்கம்போல் நிலைமையை கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.