ஜம்மு காஷ்மீர்: பள்ளி மாணவர்கள் மீது ஜன்னல் கிரில் விழுந்து 5 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரில் அரசுப் பள்ளி ஒன்றின் வகுப்பறையின் ஜன்னல் கிரில் விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்தனர்.

Update: 2023-05-15 20:13 GMT

கோப்புப்படம்

ரஜோரி,

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் திங்கள்கிழமை அரசுப் பள்ளி ஒன்றின் வகுப்பறையின் ஜன்னல் கிரில் விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்தனர்.

தண்டோட் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் 3-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஜன்னல் கிரில் திடீரென கான்கிரீட் துண்டுடன் பெயர்ந்து விழுந்தது. இதில் 5 மாணவர்கள் காயமடைந்தனர். இரண்டு மாணவர்களுக்கு தலையில் அடிபட்டது.

இதையடுத்து காயமடைந்த ஐந்து மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தற்போது நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு ஒரு நாளில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் ரஜோரியின் முதன்மை கல்வி அதிகாரி சுல்தானா கவுசர் தெரிவித்துள்ளார். பள்ளி கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்