'நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை புறக்கணிக்க மாட்டோம்' - காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

சிறப்பு கூட்டத்தொடருக்கான விவாதப்பொருள் என்ன என்பது யாருக்கும் தெரியாது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.;

Update:2023-09-06 21:14 IST

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தொடரை புறக்கணிக்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பிரச்சினைகளை முன்வைக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஒரு வாய்ப்பு என்று தெரிவித்தார். ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு விவகாரங்களை எழுப்ப முயற்சிப்பார்கள் என்று அவர் கூறினார்.

சிறப்பு கூட்டத்தொடருக்கான விவாதப்பொருள் என்ன என்பது யாருக்கும் தெரியாது என்ற குறிப்பிட்ட ஜெய்ராம் ரமேஷ், முதல் முறையாக விவாதப்பொருள் குறித்து யாரிடமும் எந்தவித தகவலும் இல்லை என்று தெரிவித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்