காட்டில் தாயுடன் உலா வரும் மிகவும் அரிதான வெள்ளை சிங்கக்குட்டி... வனத்துறை அதிகாரி பகிர்ந்த வீடியோ
அபூர்வ வெள்ளை சிங்கக் குட்டி ஒன்று, தன் தாயுடன் உலா வரும் வீடியோவை வனத்துறை அதிகாரி பகிர்ந்துள்ளார்.;
ன விலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் வைத்து எடுக்கப்பட்ட வீடியோக்களைப் பார்ப்பது எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும். வீடியோவில் ஒரு அரிய விலங்கு இடம்பெற்றால் அது மிகவும் அற்புதமாக இருக்கும்.
அதுபோன்ற அரிய வீடியோ ஒன்றை இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அடிக்கடி வனவிலங்கு தொடர்பான வீடியோக்களைப் பகிர்ந்து கொள்ளும் வனத்துறை அதிகாரி, ஒரு வெள்ளை சிங்கக் குட்டி தனது குடும்பத்துடன் காட்டில் உலா வரும் ஒரு சிறிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அவர் அந்த வீடியோவின் தலைப்பில் கூறும்போது, "இதோ உங்களுக்காக ஒரு வெள்ளை சிங்கக் குட்டி... உலகில் மூன்று வெள்ளை சிங்கங்கள் மட்டுமே காடுகளில் சுதந்திரமாக வாழ்கின்றன என்று நம்பப்படுகிறது. என்று அவர் தெரிவித்தார்.
அந்த வீடியோவில், புதர்கள் மற்றும் பாறைகள் நிறைந்த காட்டுப் பாதையில் சிங்கம் ஒன்று கம்பீரமாக காட்டில் நடப்பதையும், அதன் குட்டிகள் அங்குமிங்கும் ஓடுவதையும் பின்தொடர்வதையும் கான முடிகிறது. குட்டிகளில் ஒன்று அபூர்வ வெள்ளை இனமாகும், இது தனது தாயைப் பின்தொடர்ந்து தனது உடன்பிறப்புகளுடன் ஓடி விளையாடி வேடிக்கையாக உள்ளது.
வனத்துறை அதிகாரியின் டுவீட்டின்படி, எஞ்சியிருப்பதாகக் கூறப்படும் காட்டில் பிறந்த மூன்று வெள்ளை சிங்கங்களில் இந்த வெள்ளைக் குட்டியும் ஒன்று. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குளோபல் ஒயிட் லயன் பாதுகாப்பு அறக்கட்டளையின் படி, வெள்ளை சிங்கங்கள் மற்றும் புலிகள் இரண்டும் மிகவும் அரிதானவை. அவற்றின் தோற்றத்திற்கு ஒரு பின்னடைவு மரபணு காரணமாக உள்ளது.