மருத்துவரை தாக்கிய முதல்-மந்திரியின் மகள்: பகிரங்க மன்னிப்பு கோரிய தந்தை

மருத்துவரை மகள் தாக்கியதற்கு முதல் மந்திரி பகிரங்க மன்னிப்பு கோரினார்.

Update: 2022-08-21 11:59 GMT

ஐஸ்வால்,

மருத்துவர் ஒருவரை தனது மகள் தாக்கும் காட்சி இணையத்தில் வைரலானதை அடுத்து மிசோரம் முதல் மந்திரியும், மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவருமான ஜோரம்தங்கா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

முதல் மந்திரியின் மகள் மிலாரி சாங்டே, மாநில தலைநகர் ஐஸ்வாலில் உள்ள ஒரு மருத்துவமனையை சேர்ந்த தோல் மருத்துவ நிபுணரிடம் மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார். முன் அனுமதி இல்லாததால் மருத்துவர் முதல் மந்திரியின் மகளை சந்திக்க மறுத்துள்ளார்.

இதையடுத்து கோபம் அடைந்த முதல் மந்திரி மகள் மருத்துவரின் முகத்தை தாக்கியுள்ளார். இதனை அங்கு இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து முதல் மந்திரி மற்றும் மகள் மீது விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து முதல் மந்திரி ஜோரம்தங்கா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், ஐஸ்வாலை சேர்ந்த தோல் மருத்துவரிடம் தனது மகள் தவறாக நடந்ததற்கு மன்னிப்பு கேட்பதாகவும், அவரது நடத்தையை எந்த வகையிலும் நியாயப்படுத்த மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்