தொழில்நுட்பக்கோளாறால் நடுவழியில் நின்ற வந்தேபாரத் ரெயில்

சரக்கு ரெயிலின் எஞ்சினை பொருத்தி, வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டது.;

Update:2024-09-09 19:07 IST

வாரணாசி,

தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கு வந்தேபாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. காலை 6 மணிக்குப் புறப்படும் இந்த ரெயில், மதியம் 2.05 மணிக்கு வாராணாசியை சென்றடைகிறது. இந்த நிலையில் இந்த ரெயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று காலை எட்டாவா அருகே நின்றது.

இதையடுத்து, ரெயில்வேயின் தொழில்நுட்பக் குழுவினர் விரைந்து வந்து கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணிநேரத்துக்கு மேலாக போராடியும் அவர்களால் கோளாறை சரி செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வந்தே பாரத் ரெயிலில் இருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மேலும் அப்பகுதியில் ரெயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்தது சரக்கு ரெயிலின் எஞ்சினை பொருத்தி, வந்தே பாரத் ரெயில் பர்தானா ரெயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்