உத்தர பிரதேசம்; கணவருடன் தகராறு - 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை

கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மனைவி தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷத்தை அருந்தியுள்ளார்.;

Update:2024-03-06 16:47 IST

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் மான்பூர் பகுதியில் உள்ள அகமத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவன். இவர் தனது மனைவி ராஜ்குமாரி(32) மற்றும் 3 குழந்தைகள் சுமித் (8), நேஹா (5) மற்றும் சந்தியா (3) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் ராஜ்குமாரிக்கும், அவரது கணவர் சஞ்சீவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜ்குமாரி, தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷத்தை அருந்தியுள்ளார். இதில் 4 பேரும் உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உயிரிழந்த நால்வரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சஞ்சீவனை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அகமத்பூர் கிராமத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்