உத்தர பிரதேசம்: லாரி, பஸ் மோதலில் 8 பேர் பலி; 25 பேர் காயம்

உத்தர பிரதேசத்தில் லாரியும், பஸ்சும் மோதி கொண்டதில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.;

Update:2022-09-28 10:37 IST



லக்கீம்பூர் கெரி,


உத்தர பிரதேசத்தின் தருஹெரா பகுதியில் இருந்து லக்னோ நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ், லக்கீம்பூர் கெரி பகுதியில் ஈரா பாலம் அருகே ஈசாநகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட இடத்தில் வந்தபோது, லாரி ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 25 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று காயமடைந்த நபர்களை மீட்டு லக்னோ நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதுபற்றி அறிந்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று தேவையான உதவிகளை செய்யும்படியும், நிவாரண மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ளும்படியும், காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சைக்கு வேண்டிய முறையான ஏற்பாடுகளை செய்து தரும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்