நான்கு நாள் பயணமாக நேபாளம் சென்றார் அன்டோனியோ குட்டரெஸ்

ஐ.நா. பொதுச்செயலாளரின் வருகையை முன்னிட்டு காத்மாண்டுவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Update: 2023-10-28 21:59 GMT

காத்மாண்டு,

நேபாளத்திற்கு நான்கு நாள் அரசுமுறை பயணமாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் இன்று காத்மாண்டுவுக்கு வருகை தந்தார்.

அதிகாலை 1 மணிக்கு காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேபாள வெளியுறவு அமைச்சர் என்பி சவுத் மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். அம்மாநில முதல்-மந்திரி புஷ்ப கமல் தஹல் பதவியேற்ற பிறகு ஐ.நா.பொதுச் செயலாளர் நேபாளத்திற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

பொதுச்செயலாளர் குட்டரசின் வருகையை முன்னிட்டு காத்மாண்டுவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. முன்னதாக பொதுச்செயலாளரின் வருகைக்கு உயர்மட்ட பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன், நேபாள இராணுவத்திற்கு அரசாங்கம் கட்டளைப் பொறுப்பை வழங்கியுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்