"இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை"- மத்திய இணை மந்திரி எல்.முருகன்
இந்தியா கூட்டணி உடைந்துபோகும் கூட்டணியாக உள்ளது என மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.;
புதுச்சேரி,
புதுவையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது;
"இந்தியா கூட்டணி உடைந்துபோகும் கூட்டணியாக உள்ளது. பல மாநிலங்களில் எதிரெதிர் நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளால் எப்படி ஒன்றாக இணைந்து போட்டியிட முடியும்.
இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை. கூட்டணி கட்சிகளின் அடுத்த கூட்டத்தை கூட கூட்ட முடியாத நிலையில் உள்ளனர்." என தெரிவித்தார்.