தீரன் சின்னமலையின் தீரமும், கூர்மையான உத்தியும் உத்வேகம் தருபவை: பிரதமர் மோடி

இந்திய சுதந்திர போராட்டத்தின் வலிமை மிக்க வீரராக நினைவுகூரப்படுகிறார் என தீரன் சின்னமலையின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.

Update: 2024-04-17 07:13 GMT

புதுடெல்லி,

பிரிட்டிஷாரின் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர் தீரன் சின்னமலை. தமிழகத்தின் ஈரோட்டில் சென்னிமலை பகுதிக்கு அருகே, செ. மேலப்பாளையம் எனும் சிற்றூரில் பிறந்த அவருடைய 268-வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தீரன் சின்னமலையின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு தன்னுடைய அஞ்சலியை செலுத்தி உள்ளார்.

இதுபற்றி அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், தீரன் சின்னமலை பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் இந்திய சுதந்திர போராட்டத்தின் வலிமை மிக்க வீரராக நினைவுகூரப்படுகிறார். காலனிய ஆதிக்கத்தை எதிர்த்த அவருடைய துணிச்சலான தீரமும், கூர்மையான உத்தியும் மிகுந்த உத்வேகம் தருபவை என அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்