டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்த ஐ.நா தலைவர்
டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை இன்று ஐ.நா தலைவர் சந்தித்தார்.;
புதுடெல்லி,
ஐ.நா. பொதுச்சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ். இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் இவர், டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை இன்று சந்தித்தார்.
ஐ.நா பொதுச்சபையின் தலைவரை இந்தியாவிற்கு வரவேற்ற முர்மு, காலநிலை மாற்றம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதற்கு பாராட்டு தெரிவித்தார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளையும் உறுப்பினராக சேர்ப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஐ.நா–இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக, பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸின் சுற்றுப்பயணம் இருக்கும் என்று கருதப்படுகிறது.