மீண்டும் வேலை வழங்க கோரிக்கை மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
மீண்டும் வேலை வழங்க கோரிக்கை மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.;
புதுடெல்லி,
மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
இதுதொடர்பான அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த மனு மீதான தீர்ப்பை கடந்த மாதம் 22-ந்தேதி ஒத்திவைத்தது.
இந்த நிலையில் இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) கூறுகிறது.