பூதம் பிடித்து விட்டது-தாய், மகளை ரொம்ப பிடித்து விட்டது-மந்திரவாதி
டெல்லியில் பூதம் பிடித்த சிறுமியை, ரொம்ப பிடித்து போன மந்திரவாதியால் சிறுமி 2 மாத கர்ப்பம் அடைந்து உள்ளார்.;
புதுடெல்லி,
டெல்லியில் பாபா ஹரிதாஸ் நகரில் வசித்து வரும் தாய் தனது 14 வயது மகளுக்கு பூதம் பிடித்து விட்டது என நினைத்து பயந்து போயுள்ளார்.
இதனால், அக்கம்பக்கத்தில் விசாரித்து மகளை பிடித்த பூதம் போவதற்காக மந்திரவாதி ஒருவரை அணுகி உள்ளார். இதுபோன்று அடிக்கடி சிறுமியை அழைத்து வரும்படி அந்த மந்திரவாதி கூறியுள்ளார்.
பூதம் விரட்டுவதற்காக அவர் அப்படி கூறுகிறார் என நினைத்து, சிறுமியின் தாயாரும் அழைத்து சென்று உள்ளார். ஆனால், மந்திரவாதிக்கு அந்த சிறுமியை ரொம்ப பிடித்து போயுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சிறுமியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இதில், சிறுமி 2 மாத கர்ப்பம் அடைந்து உள்ளார். இவ்வளவு நடந்தும் சிறுமி, தாயிடம் பயத்தில் எதுவும் கூறவில்லை.
எனினும், மகளின் நடவடிக்கைகளில் மாற்றம் வருவதுபற்றி அறிந்த தாய் சிறுமியிடம் விசாரித்து உள்ளார். அதன்பின்பு, சம்பவம் பற்றி அறிந்து, அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
உடனடியாக அவர், போலீசில் புகார் அளித்து உள்ளார். இதனை அடுத்து, போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மந்திரவாதியையும் அவர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.