பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியை உறவுக்கு அனுப்பி வைக்க கூறிய போதை ஆசாமிக்கு நேர்ந்த கதி

கர்நாடகாவில் போதையில் பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியை உறவுக்கு அனுப்பி வைக்க கூறிய நபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-03-13 16:34 GMT



பெங்களூரு,


கர்நாடகாவின் பெங்களூரு நகரில் சித்தபுரா பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இந்நிலையில், மணிகண்டன் குடிபோதையில் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

வரும் வழியில் சுரேஷை பார்த்து, அவரது மனைவியை பாலியல் உறவுக்கு அனுப்பி வைக்கும்படி கூறி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் பெரிய தடி ஒன்றை எடுத்து மணிகண்டனின் தலையில் அடித்து உள்ளார். இதில், அவர் படுகாயம் அடைந்து உள்ளார்.

இந்த சம்பவத்தில் கடுமையாக தாக்கப்பட்ட மணிகண்டன் உயிரிழந்து விட்டார். அவரது உடல் கீழே கிடந்து உள்ளது. ஆனால், இந்த கொலையை மறைக்கும் வகையில் மணிகண்டனின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் மணிகண்டன் குடித்து விட்டு தரையில் படுத்து கிடக்கிறார் என ரமேஷ் கூறியுள்ளார்.

இதனால், அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு அவரை கூட்டி வருவதற்காக சென்று உள்ளனர். வீட்டுக்கு வந்த பின்னர், மணிகண்டனின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து வந்து உள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். எனினும், மணிகண்டன் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறி விட்டனர்.

வீடியோ மற்றும் பிற சான்றுகளின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்து சுரேஷை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்