உத்தரப்பிரதேசம்: டிரெய்லர் மீது டெம்போ மோதி விபத்து - 6 பேர் பலி
லக்னோ-கான்பூர் நெடுஞ்சாலையில் டிரெய்லர் மீது டெம்போ மோதி ஏற்பட்ட விபத்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ-கான்பூர் நெடுஞ்சாலையில் டிரெய்லர் மீது டெம்போ மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
நேற்று இரவு பாந்த்ரா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட கான்பூர் நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. டெம்போ பின்னோக்கி சென்ற போது டிரெய்லரில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர்.