கந்துவட்டி கொடுமையால் ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை-சோகத்தில் அண்ணணும் உயிரை மாய்த்துகொண்டார்

உப்பள்ளியில், கந்துவட்டி கொடுமையால் ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். தம்பி இறந்த சோகத்தில் ஏரியில் குதித்து அண்ணனும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-07-19 16:30 GMT

உப்பள்ளி: உப்பள்ளியில், கந்துவட்டி கொடுமையால் ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். தம்பி இறந்த சோகத்தில் ஏரியில் குதித்து அண்ணனும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

கந்துவட்டி கொடுமை

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் வித்யாநகரில் வசித்து வந்தவர் சுனில் தொங்கடி(வயது 30). இவரது அண்ணன் ராஜூ(34). இதில் சுனில் தொங்கடி, கந்துவட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் வேலை, சம்பளம் சரிவர இல்லாததால் அவரால் வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியவில்லை.

இதனால் கடன் கொடுத்தவர்கள், சுனிலை நச்சரித்து வந்துள்ளனர். இதனால் சுனில் தொங்கடி, மனமுடைந்து காணப்பட்டுள்ளார். மேலும் தற்கொலை செய்யவும் முடிவு செய்துள்ளார்.

வாலிபர் தற்கொலை

அதன்படி நேற்று இரவு தற்கொலை செய்ய உண்கல் ஏரிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு வைத்து சுனில், அண்ணன் ராஜூவை செல்போனில் தொடர்புகொண்டு உண்கல் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொள்வதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து சுனில், ஏரியில் குதித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜூ, உண்கல் ஏரிக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது ஏரிக்கரையில் சுனிலின் செல்போன், செருப்பு இருந்துள்ளது. இதனால் ஏரியில் குதித்து தம்பி சுனில் தற்கொலை செய்ததை அறிந்தார்.

அண்ணனும்...

தம்பி தற்கொலை செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாத ராஜூவும், ஏரியில் குதித்து தற்கொைல செய்துகொண்டார். இதையறிந்த அப்பகுதி மக்கள், வித்யாநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படையினருடன் உண்கல் ஏரிக்கு விரைந்து வந்து தற்கொலை செய்த அண்ணன்-தம்பி 2 பேரின் உடல்களை தேடினர். ஆனால் அவர்களது உடல்கள் உடனடியாக கிடைக்கவில்லை. உப்பள்ளியில், கந்துவட்டி கொடுமையால் ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். தம்பி இறந்த சோகத்தில் ஏரியில் குதித்து அண்ணனும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.நேற்று காலை படகு மூலம் தேடியபோது 2 பேரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 2 பேரின் உடல்களும், பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணையில், கந்து வட்டி கொடுமையால் ஏரியில் குதித்து சுனில் தற்கொலை செய்ததும், தம்பி இறந்த துக்கம் தாளாமல் அண்ணன் ராஜூவும் அதே ஏரியில் குதித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வித்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்