மத்தியபிரதேசம்: வெடிவிபத்தில் 4 பெண்கள் பலி
மத்தியபிரதேசத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.;
போபால்,
மத்தியபிரதேசத்தின் மொரினா மாவட்டம் ரதோர் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கி தோட்டாவுக்கு பயன்படுத்தப்படும் வெடி மருந்து வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம், சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.