கர்நாடகத்தில் இதுவரை ரூ.39¾ கோடி ரொக்கம் சிக்கியது

கர்நாடகத்தில் இதுவரை ரூ.௧௦௦ கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது,

Update: 2023-04-09 21:14 GMT

பெங்களூரு:

கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் சட்டசபை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக வாகன சோதனைகளை மேற்கொள்ள தற்காலிக சோதனை சாவடிகள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.36 கோடியே 80 லட்சத்து 16 ஆயிரத்து 674 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.15 கோடியே 46 லட்சத்து 16 ஆயிரத்து 417 மதிப்புள்ள பரிசு பொருட்களும், ரூ.26 கோடியே 53 லட்சத்து 97 ஆயிரத்து 312 மதிப்புள்ள மதுபானமும், ரூ.2 கோடியே 89 லட்சத்து 77 ஆயிரத்து 410 மதிப்புள்ள போதைப்பொருளும், ரூ.17 கோடியே 48 லட்சத்து 15 ஆயிரத்து 643 மதிப்புள்ள தங்க நகைகளும், வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆக மொத்தம் ரூ.99 கோடியே 18 லட்சத்து 237 ஆயிரத்து 4577 மதிப்புள்ள ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 792 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 57 ஆயிரத்து 126 உரிமம் பெற்ற துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்