விவசாயி வீட்டில் ரூ.10 லட்சம் நகை-பணம் திருட்டு; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மொலகால்மூரு அருகே விவசாயி தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த ரூ.10 லட்சம் தங்கநகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-06-14 15:10 GMT

சிக்கமகளூரு;

விவசாயி

சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்மூரு தாலுகா கொனசாகரா கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்ஜெயா. விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனா். இந்த நிலையில் இவர் தனது மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தார். திருமணத்திற்கு தேவையான நகைகள், பணத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.

இதையடுத்து தனஞ்ஜெயா வசித்து வரும் வீட்டிற்கு வண்ணம் பூசும் வேலை காரணமாக அருகே இருந்த பழைய வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்து வந்தார். இதனால் இரவு புதிய வீட்டை பூட்டிவிட்டு பழைய வீட்டில் தனஞ்ஜெயா குடும்பத்துடன் தூங்கி வந்தார்.

ரூ.10 லட்சம் தங்கநகை, பணம்

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மர்மநபர்கள், தனஞ்ஜெயாவின் புதிய வீட்டின் முன்கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் மர்மநபர்கள், வீட்டில் பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்று காலை வீட்டிற்கு தனஞ்ஜெயா வந்துள்ளார்.

அப்போது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடப்பதையும், பீரோவில் இருந்த நகை, பணம் திருட்டு போனதை கண்டும் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து தான் தனஞ்ஜெயாவுக்கு, மர்மநபர்கள் வீட்டில் புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றதை உணர்ந்தார். தனஞ்ஜெயாவின் வீட்டில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

வலைவீச்சு

இதுகுறித்து தனஞ்ஜெயா, ெமாலக்கால்மூரு போலீசில் புகாா் அளித்தார். அந்த புகாாின்போில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாயை வரவழைத்து சோதனை நடத்தினர்.

அப்போது மோப்ப நாய் மோப்பம் பிடித்து சிறிதுதூரம் ஓடிநின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதற்கிடையே தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்துகொண்டனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து மொலகால்மூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்