ராஜஸ்தானில் 2 பைக் மீது கார் மோதியதில் 6 பேர் பலி

விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் தப்பியோடிய நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2024-09-05 12:53 IST

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள சூரத்கர்-அனுப்கர் மாநில நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியே வந்த 2 பைக் மீது அதிபயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள், தாராசந்த் (20), மணீஷ் (24), சுனில் குமார் (20), ராகுல் (20), சுப்கரன் (19), பல்ராம் (20) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்