புதிய நாடாளுமன்றம் குறித்து சர்ச்சை 'டுவீட்': ராஷ்ட்ரீய ஜனதாதளத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம்

புதிய நாடாளுமன்றம் குறித்து சர்ச்சை டுவீட் செய்த ராஷ்ட்ரீய ஜனதாதளத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.;

Update:2023-05-29 03:59 IST

புதுடெல்லி,

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள நாடாளுமன்ற கட்டிடம் நேற்று திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் வடிவத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தனது டுவிட்டரில் சர்ச்சை பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷேஷாத் பூனவல்லா தனது டுவிட்டர் தளத்தில், 'இந்த நிலைக்கு அவர்கள் வீழ்ந்துள்ளனர். அருவருப்பானது. இது ராஷ்ட்ரீய ஜனதாதள அரசியலின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் இறுதி ஆணியாக இருக்கும். திரிகோணம் அல்லது முக்கோணங்கள் இந்திய அமைப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதேநேரம் சவப்பெட்டி அறுகோணமானது அல்லது ஆறு பக்க பலகோணத்தைக் கொண்டது' என சாடியுள்ளார்.

மற்றொரு செய்தி தொடர்பாளரான கவுரவ் பாட்டியா, '2024-ம் ஆண்டு தேர்தலில், நாட்டு மக்கள் உங்களை இந்த சவப்பெட்டியில் புதைப்பார்கள். புதிய ஜனநாயக கோவிலுக்குள் நுழையக்கூட வாய்ப்பளிக்க மாட்டார்கள். உங்களுக்கு சவப்பெட்டியா? அல்லது நாடாளுமன்றமா? என்று பார்ப்போம்' என கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்