16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

கொள்ளேகாலில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update:2023-09-12 03:18 IST

கொள்ளேகால்:

கொள்ளேகாலில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

பலாத்காரம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா கருலேகட்டே கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 22). இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் அந்த சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தைகள் கூறி உள்ளார். இதனை நம்பிய அந்த சிறுமியும், குமாருடன் சுற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் குமார், ஆசைவார்த்தைகள் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறக்கூடாது என்றும் சிறுமியை குமார் மிரட்டி உள்ளார்.

கர்ப்பம்

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாள். இதனால் அவளை பெற்றோர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகவும், 2 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர், இதுகுறித்து சிறுமியிடம் கேட்டுள்ளனர். அப்போது சிறுமி நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கூறி உள்ளாள்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து கொள்ளேகால் புறநகர் போலீசில் புகார் அளித்தனர்.

கைது

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்