அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: உத்தரகாண்ட்டில் மதுபான கடைகள் மூடல்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடவுள் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2024-01-13 12:36 GMT

டேராடூன்,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடவுள் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்களுக்கு அயோத்தி கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை உத்தரபிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி உத்தரகாண்ட்டில் வரும் 22ம் தேதி மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள மதுபான கடைகள், பார்கள் அனைத்தும் 22ம் தேதி மூடப்பட வேண்டும் என்று உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறி கடைகளை திறந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 22ம் தேதி உத்தரபிரதேசத்திலும் மதுபான கடைகள், பார்களை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்