கடும் குளிரை பொருட்படுத்தாமல் அயோத்தியில் குவிந்து வரும் பக்தர்கள்

அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவி வரும் சூழலில் பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

Update: 2024-01-28 08:59 GMT

அயோத்தி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 23-ந்தேதி முதல் அயோத்தி ராமர் கோவிலில் பொது தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலில் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர்.

இதனிடையே அயோத்தி ராமர் கோவிலில் ஆரத்தி, தரிசனத்திற்கான நேர அட்டவணையை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை நிர்வாகம் வெளியிட்டது. இதன்படி அதிகாலை 4.30 மணிக்கு ஸ்ரீநகர் ஆரத்தி தொடங்கி இரவு 10 மணிக்கு நடைபெறும் ஷயான் ஆரத்தியுடன் தினசரி பூஜைகள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வரும் சூழலில், குளிரையும் பொருட்படுத்தாமல் ராமரை தரிசனம் செய்வதற்காக அயோத்தியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவி வரும் நிலையில், பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அயோத்திக்கு வந்து நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்