அயோத்தி ராமர் கோவிலில் குவிந்த பக்தர்கள்: கடும் கூட்ட நெரிசல்
அயோத்தி ராமர் கோவிலில் இன்று முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் பிரதிஷ்டை விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், திரைப்பிரபலங்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதனிடையே, கோவில் பிரதிஷ்டை நேற்று நடைபெற்ற நிலையில் இன்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதையடுத்து அதிகாலையிலிருந்தே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ராமர் கோவிலில் குவிந்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைய முயற்சித்தனர். இதனால், சிலர் கீழே விழுந்தனர். இதையடுத்து, அங்கு பணியில் இருந்த பாதுகாவலர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.