அயோத்தியில் கண்டது பல ஆண்டுகளாக நம் நினைவில் இருக்கும் - வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை நேற்று நடைபெற்றது.;

Update: 2024-01-23 06:13 GMT

டெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் பிரதிஷ்டை விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், திரைப்பிரபலங்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ராமர் கோவில் பிரதிஷ்டை நிறைவடைந்ததையடுத்து பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா தொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது டுவிட்டர் (எக்ஸ்) சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், ஜனவரி 22ம் தேதியான நேற்று அயோத்தியில் நாம் கண்டது பல ஆண்டுகளாக நம் நினைவில் இருக்கும்' என பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்