"இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பை ராகுல் காந்தியால் பெற முடியாது" - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

Update: 2022-12-24 16:45 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பவான் கேஹ்ரா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று விரும்புவதாகவும், 2024 தேர்தல் முடிவுகள் அதனை முடிவு செய்யும் என்றும் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சமூகநீதித்துறை மந்திரி ராம்தாஸ் அத்வாலே, 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி பிரதமராகும் வாய்ப்பு இருந்தது என்றும், ஆனால் அப்போது காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் தற்போது காலம் கடந்து விட்டதாகவும், இனி இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பை ராகுல் காந்தியால் பெற முடியாது என்றும் அவர் கூறினார். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்த அவர், 2024 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 400-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்