பஞ்சாப் முதல்-மந்திரிக்கு திடீர் உடல்நலக் குறைவு; டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை

பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-07-21 05:28 GMT

புதுடெல்லி,

பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டதை அடுத்து, தலைநகர் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு வயிற்று வலி இருந்ததால் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து, அவருக்கு நோய்த் தொற்று இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான் கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் முதல்-மந்திரியாக பதவியேற்றார். மேலும், கடந்த 7ம் தேதி அவருக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்