தேர்வில் தோல்வி எதிரொலி: பி.யூ. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பி.யூ.சி. தேர்வில் தோல்வி அடைந்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2023-04-22 04:21 IST

கொள்ளேகால்:

தேர்வில் தோல்வி

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் சாம்ராஜ்நகர் டவுனில் உள்ள தனியார் பி.யூ. கல்லூரியில் விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் தேர்வு எழுதியிருந்த விஜயலட்சமி, முடிவுக்காக காத்திருந்தார். மேலும் அவர் சாம்ராஜ்நகரில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. விடுதியில் இருந்தபடி விஜயலட்சுமி தேர்வு முடிவுகளை பார்த்தார். அப்போது, அவர் 4 பாடங்களில் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அழுதார்.

மாணவி தற்கொலை

இந்த நிலையில், 4 பாடங்களில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். பின்னர் தனது அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சாம்ராஜ்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், தற்கொலை செய்துகொண்ட விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தேர்வில் தோல்வி அடைந்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சாம்ராஜ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்