கேதார்நாத் கோயிலுக்குள் தங்கத் தகடுகள் பொருத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு..!
கேதார்நாத் கோயிலுக்குள் தங்கத் தகடுகள் பொருத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டோராடூன்,
இந்தியாவின் 12 சோதிலிங்க சிவத்தலங்க தலங்களில் ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில்,கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது.
இந்த நிலையில், கேதார்நாத் கோவிலின் கருவறையில் தற்போது 230 கிலோ எடையில் வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு தங்கத் தகடுகள் பொருத்திக் கொடுக்க மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் முன்வந்துள்ளார்.
இது தொடர்பாக பத்ரிநாத் - கேதார்நாத் கோயில் கமிட்டி அதிகாரிகள் கூறியதாவது:
கேதார்நாத் கோயிலின் கருவறையில் கடந்த 2017-ம் ஆண்டு வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டன. இங்கு தங்க தகடுகள் பொருத்தி தர மும்பை வைர வியாபாரி ஒருவர் முன்வந்துள்ளார். அவர் தனது பெயரை பொதுவில் தெரிவிக்க விரும்பவில்லை. கேதார்நாத் கோயில் கருவறையில் தங்க தகடுகள் பொருத்த அவர் அரசிடம் அனுமதி கோரினார். இதற்கு கடந்த மாதம் ஒப்புதல் கிடைத்தது.
தங்க தகடுகள் பொருத்துவதற்காக, வெள்ளித் தகடுகளை அகற்றும் பணியை தொடங்கிவிட்டோம். அதன்பின் கருவறைக்குள்ளும், தூண்களிலும் தாமிர தகடுகள் பொருத்தப்படும். அளவெடுக்கும் பணி முடிவடைந்ததும், தங்க தகடுகள் செய்யப்பட்டு பொருத்தப்படும். கருவறையின் சுவர்கள், மேற்கூரைகள் மற்றும் தூண்களில் தங்க தகடுகள் பொருத்தப்படவுள்ளன என்று கோயில் கமிட்டி அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில், கேதார்நாத் கோவிலின் கருவறைக்குள்ளும் தூண்களுக்கும் தங்கத் தகடுகள் பொருத்துவதற்கு அர்ச்சகர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. " பாண்டவர்கள் நினைத்து இருந்தால் தங்கத்திலோ, வைரத்திலோ கருவறையை கட்டிருக்கலாம், ஆனால் இப்போது அவற்றை மாற்றுவது கோவில் அர்த்தத்தையே மாற்றுவதாகும் அர்ச்சகர்கள் தரப்பில் கூறியுள்ளனர்.