அரசியல் ஒலி பெருக்கி

அரசியல் தரைவர்கள் கருத்து

Update: 2023-04-09 18:45 GMT

பா.ஜனதா ஆட்சியில் நாடு வளர்ச்சி

நமது நாடு பல ஆண்டுகளாக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்று கொண்டிருந்தது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு தான் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. பா.ஜனதா ஆட்சியில் தான் வளர்ச்சி பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நகரங்களிலும், கிராமங்களிலும் குடிநீர், சாலை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைத்து வருகிறது. கர்நாடகத்தின் வளர்ச்சியில் பா.ஜனதா தனிக்கவனம் செலுத்துகிறது.

- நிர்மலா சீதாராமன், மத்திய நிதி மந்திரி.

முதல்-மந்திரி பதவிக்கு காங்கிரசில் போட்டி

காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே முதல்-மந்திரி பதவிக்கு போட்டி நடந்தது. தற்போது தேர்தலில் போட்டியிட சீட் வேண்டும் என்று காங்கிரஸ் பிரமுகர்கள் வீதிக்கு வந்து போராடி வருகின்றனர். இதுபோன்று காங்கிரஸ் கட்சியில் மட்டுமே நடக்கும்.

காங்கிரஸ் கட்சியின் பழக்கமே இதுதான். எப்படியாக இருந்தாலும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியாது. தேர்தலில் தோற்று காங்கிரஸ் காணாமல் போய் விடும்.

- தேஜஸ்வி சூர்யா, பா.ஜனதா எம்.பி.

வாக்குறுதிகளை நிறைவேற்ற உத்தரவாத அட்டை

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக தான் வீடுகள் தோறும் உத்தரவாத அட்டையை காங்கிரஸ் வழங்கி வருகிறது.

இதன்மூலம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்கிறது. பா.ஜனதாவை போன்று பொய் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி கொடுக்காது.

- தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் முன்னாள் மந்திரி.

பசவராஜ் பொம்மை முகத்திற்கு ஓட்டு கிடைக்காது

பா.ஜனதாவினர் தேர்தல் பிரசாரத்திற்காக நடிகர்களை தேடி சென்றுள்ளனர். ஏனெனில் முதல்-மந்திரியாக இருந்து வரும் பசவராஜ் பொம்மை முகத்திற்காக ஓட்டு கிடைக்காது.

அதற்காக தான் தேர்தல் பிரசாரத்திற்காக நடிகர்களை பா.ஜனதாவினர் அழைத்து வருகிறார்கள். பா.ஜனதாவினர் தேர்தலில் வெற்றி பெற போவதில்லை என்று தெரிந்து தான், மக்களை சேர்ப்பதற்காக நடிகர்கள் பக்கம் சாய்ந்துள்ளனர்.

- ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்.

காங்கிரசின் ஊழலுக்கான உத்தரவாதம்

காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதம் என்னவென்றால், அது ஊழல் தான். ஊழலுக்கு உத்தரவாதம் அளித்து தான், உத்தரவாத அட்டையை வினியோகித்து வருகின்றனர். சட்டசபை தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்காக பொய் வாக்குறுதிகளை காங்கிரஸ் கொடுத்து வருகிறது.

இந்த பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள். ஊழல் கட்சியான காங்கிரசுக்கு சட்டசபை தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்க்ள்.

Tags:    

மேலும் செய்திகள்