மேற்கு வங்கத்தில் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் பல்வேறு ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

Update: 2024-03-09 15:08 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள சிலிகுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது மேற்கு வங்கத்தில் ரூ.4,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்திற்கு இந்த மாதத்தில் 3-வது முறையாக பிரதமர் மோடி சென்றுள்ளார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது மேற்கு வங்கத்தில் பல்வேறு ரெயில்வே திட்டங்கள் மற்றும் ரூ.3,100 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதன் பின்னர் பேசிய பிரதமர் மோடி, "சுதந்திரத்திற்குப் பிறகு கிழக்கு இந்தியா நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்தது. ஆனால் பா.ஜ.க. அரசு கிழக்கு இந்தியாவை நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக கருதுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், மேற்கு வங்க மாநிலத்தின், குறிப்பாக அதன் வடக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு பா.ஜ.க. அரசு முன்னுரிமை அளித்து வருகிறது" என்று தெரிவித்தார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தின் வடக்கு பிராந்தியத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்