டெலிபிராம்ப்டர் இன்றி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி

முதல் முறையாக தனது சுதந்திர தின உரையில் டெலி பிராம்ப்டரை தவிர்த்துள்ளதாக தெரிகிறது.

Update: 2022-08-15 11:34 GMT

புதுடெல்லி,

நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றினார். 82 நிமிடங்கள் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். சுதந்திர போராட்ட வீரர்கள், தேசத்தின் வளர்ச்சிக்கான கட்டமைப்பில் பங்கு கொண்டவர்கள் குறித்து பேசிய பிரதமர் மோடி, நாட்டின் நூற்றாண்டு சுதந்திர விழா கொண்டாட்டத்தின் போது தேசத்தை வல்லரசு ஆக்கும் நோக்கில் தொலைநோக்கு திட்டம் குறித்தும் பேசினார்.

டெலி பிராம்ப்டர் வைத்தே பிரதமர் மோடி பேசுவதை  வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆனால், 75-வது சுதந்திர தின உரையில் டெலி பிராம்ப்டரை பயன்படுத்தாமல் பேப்பரில் எழுதப்பட்ட குறிப்புகள் வைத்த பிரதமர் மோடி தனது முழு உரையையும் நிகழ்த்தினார். முதல் முறையாக தனது சுதந்திர தின உரையில் டெலி பிராம்ப்டரை தவிர்த்துள்ளதாக தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்