பசுமாட்டை தாக்கி கொன்ற சிறுத்தையால் பீதி

மூடிகெரே அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுமாட்டை சிறுத்தை தாக்கி கொன்றது. இதனால் பீதியடைந்த மக்கள் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.;

Update:2023-04-04 20:54 IST

சிக்கமகளூரு:-

சிறுத்தை தாக்குதல்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஹெரூர் கிராமம் வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டுயானைகள், புலி, சிறுத்தைகள் வந்து, அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ஜீவராஜ் என்பவரின், பசுமாட்டை சிறுத்தையொன்று வேட்டையாடிவிட்டு ெசன்றுள்ளது. ஜீவராஜ் வழக்கம்போல நேற்று முன்தினம் வனப்பகுதியின் அருகே தனது பசுமாட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

இந்த பசுமாடு மாலை நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்ைல. இதனால் சந்தேகம் அடைந்த ஜீவராஜ் வனப்பகுதியின் அருகே சென்று பார்த்தார். அங்கு பசுமாடு இறந்து கிடந்தது. அதாவது சிறுத்தை பசுமாட்டை தாக்கி கொன்றதுடன், பாதி உடலை தின்றுவிட்டு சென்றிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இது குறித்து மூடிகெரே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

கூண்டு வைத்து பிடிக்கவேண்டும்

சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்ற வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஜீவராஜ் மற்றும் கிராம மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை தடுப்பதுடன், கூண்டு வைத்து அதை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முறையிட்டனர்.

இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் தொடர்ந்து சிறுத்தை நடமாடி வருவதால், மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்