ஒரு புறம் வலி நிறைந்த இதயமாக இருந்தாலும் மறுபுறம் கடமைக்கான பாதை இருக்கிறது - பிரதமர் மோடி

தான் இங்கிருந்தாலும் தனது மனம் மோர்பியாவில் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்

Update: 2022-10-31 05:42 GMT

ஆமதாபாத்,

குஜராத்தின் கேவாடியாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-

குஜராத் பால விபத்து நிகழ்வால் எனது இதயம் வலியுடன் காணப்படுகிறது. ஒரு புறம் வலி நிறைந்த இதயமாக இருந்தாலும் மறுபுறம் கடமைக்கான பாதை இருக்கிறது. தான் இங்கிருந்தாலும் தனது மனம் மோர்பியாவில் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளது.

இந்தியாவின் முன்னேற்றத்தால் குழப்பமடைந்த சக்திகள் இன்றும் உள்ளன. அவர்கள் நம்மை உடைக்கவும் பிரிக்கவும் முயற்சி செய்கிறார்கள்.

ஜாதியின் பெயரால் நம்மை எதிர்த்துப் போராட கதைகள் உருவாக்கப்படுகின்றன. மாநிலங்களின் பெயரால் நம்மை பிரிக்க முயற்சி நடக்கிறது.

ஒரு இந்திய மொழியை இன்னொரு இந்திய மொழிக்கு எதிரியாக்கும் பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன. மக்கள் ஒருவரையொருவர் சேர்க்காமல், ஒருவரையொருவர் விட்டு விலகிச் செல்லும் வகையில் வரலாறு முன்வைக்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த (முன்னாள்) அரச குடும்பங்கள், நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு புதிய அமைப்புக்காக தங்கள் உரிமைகளை அர்ப்பணித்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக இந்த பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டது. முன்னாள் அரச குடும்பங்களின் தியாகங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் ஏக்தா நகரில் கட்டப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்