பீகார்: ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து திடீரென கழன்ற பெட்டிகள்

தர்பாங்கா ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கி ரெயில் சென்றுகொண்டிருந்தது.;

Update:2024-07-30 01:38 IST

பாட்னா,

பீகார்-டெல்லி இடையே சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ரெயில், நேற்று பீகார் மாநிலம் தர்பாங்கா ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கி சென்றுகொண்டிருந்தது.

சமஸ்திபூர்-முசாபர்பூர் இடையே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 2 பெட்டிகளுடன் அந்த ரெயிலின் என்ஜின் தனியாக கழன்று ஓடியது. இதனால் அந்த ரெயில் இருதுண்டுகளாக பிரிந்து மீதமுள்ள ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கழன்ற பெட்டிகளை மீண்டும் ரெயிலுடன் இணைத்தனர். இதனால் ரெயில் சில மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. 

Tags:    

மேலும் செய்திகள்