நுபுர் சர்மா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்; அகில இந்திய முற்போக்கு முஸ்லிம் நலக் குழு புகார்
அகில இந்திய முற்போக்கு முஸ்லிம் நலக் குழுவின் பிரதிநிதிகள், நுபுர் சர்மா மீது மராட்டிய மாநில போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளனர்.;
மும்பை,
அகில இந்திய முற்போக்கு முஸ்லிம் நலக் குழுவின் பிரதிநிதிகள், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா மீது மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளனர்.
சமீபத்தில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையானது. உலகளவில் இஸ்லாமிய நாடுகள் பலவும் இதுகுறித்து இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், இந்தியாவும் பதில் விளக்கம் அளித்தது.
முகமது நபிக்கு எதிராக அவர் கூறிய ஆட்சேபனைக்குரிய கருத்துகளுக்காக அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் கடந்த செவ்வாய்க்கிழமையன்று புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் இதுவரை எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. புகாரை விசாரணை நடத்தி வருகின்றோம். அதன்பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனிடையே, ஜூன் 22-ம் தேதி விசாரணை அதிகாரி முன் வாக்குமூலம் பதிவு செய்ய ஆஜராகுமாறு நுபுர் ஷர்மாவுக்கு மும்பை போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பியுள்ளனர். அதேபோல, மே 28 அன்று, மும்பையில் உள்ள பைடோனி போலீசாரும் நுபுர் ஷர்மா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.