மான்கள் இலைகளை உண்பதற்காக மரத்தின் கிளையை வளைத்துக்கொடுக்கும் குரங்கு... வைரல் வீடியோ
மான்கள் இலைகளை உண்ண குரங்கு ஒன்று உதவி செய்துள்ள காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.;
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா, தன்னுடைய டுவீட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோ, குரங்கு மற்றும் மான்களுக்கு இடையிலான மகிழ்ச்சிகரமான தருணத்தை காட்டுகிறது.
அதில், மான்கள் அருகில் இருக்கும் மரத்தில் உள்ள இலைகளை உண்ண முற்படுகிறது. ஆனால், மரத்தின் கிளைகள் சற்று உயரத்தில் இருப்பதனால், மான்களால், கிளைகளை இழுத்து உண்ணமுடியவில்லை.
அப்போது அந்த மரத்தில் அமர்ந்திருந்த குரங்கு ஒன்று, தன்னுடைய முயற்சியால், மரத்தின் ஒரு பகுதி கிளைகளை வளைத்து கொடுக்கிறது. அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மான்கள், லாவகமாக இலைகளை உண்ணத்தொடங்குகிறது.
மான்களுக்கு உதவி செய்துள்ள குரங்கினை பார்த்த இணையவாசிகள் அதனை வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஒருசிலர், விலங்குகள் தங்களுக்கிடையே செய்துகொள்ளும் உதவிகளை தற்போது மனிதர்களிடையே காண்பது அரிதாக உள்ளது என தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.