மோகன் பகவத்தை `தேசப் பிதா' என கூறிய அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர்
அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாஸி ஆர்.எஸ்.எஸ் தலைவர் `தேசப் பிதா' என்று குறிப்பிட்டு உள்ளார்.
புதுடெல்லி
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபகாலமாக முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். அதனடிப்படையில், டெல்லியில் உள்ள முக்கிய மதகுருவான அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாஸியை நேற்று சந்தித்துப் பேசினார்.
அதைத் தொடர்ந்து அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாஸி செய்தியாளர்களிடம் பேசும் போது
``என் அழைப்பின் பேரில் மோகன் பகவத் இன்று வருகை தந்தார். அவர் தேசத்தின் தந்தை. அவர் வருகையிலிருந்து ஒரு நல்ல செய்தி வெளிப்படும் இந்த வருகையின் வாயிலாக, நாட்டை பலப்படுத்த அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் . இந்தியாவில் இந்து, முஸ்லிம்களாகிய நாம் கடவுளை வழிபடும் முறைகள் வேறு வேறு. ஆனால், நம் அனைவரும் ஒன்றுதான். நம் அனைவருக்கும் நாடு தான் முதன்மையானது. மதமும், வழிபாட்டு முறையும் வெவ்வேறாக இருந்தாலும், நாம் அனைவருக்கும் ஒரே மரபணு தான் எனக் கூறினார்.
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாடு முழுவதும் உள்ள முக்கிய 5 மத குருக்களை மோகன் பகவத் சந்திப்பதாக தகவல் வெளியானது.
இது குறித்து ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர், ``இந்தச் சந்திப்பு தொடர் விவாதத்தின் ஒரு பகுதியாகும். ஆர்.எஸ்.எஸ் தலைவர் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார்" என்று கூறினார்.
பட்டுக்கோட்டை மக்களிடம் ருத்ர சித்தராக வலம் வந்த அருள் வாக்கு சாமியார் ஒருவர் சிங்கப்பூரில் உள்ள பக்தரின் நோயை குணமாக்க சென்ற இடத்தில், ஹல்க் சாமியார் ஒருவரிடம் சிக்கி சின்னாபின்னமான வீடியோ வெளியாகி உள்ளது.