எம்.எல்.ஏ. வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் - அதிர்ச்சி சம்பவம்
எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணியில் அப்னா தளம் (சோனேலால்) கட்சி இடம்பெற்றுள்ளது. இதனிடையே, அம்மாநிலத்தின் சோக்ரத்கட் தொகுதி அப்னா தளம் (சோனேலால்) கட்சி எம்.எல்.ஏ. வினய் வர்மா. இவருக்கு ஹஸ்ரத்கஞ்ச் நகரில் அரசு தரப்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், அவர் வேறு வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் எம்.எல்.ஏ. வினய் வர்மா வீட்டில் நேற்று கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் புனரமைப்புக்காக வைக்கப்பட்டிருந்த வண்ணமயமான வாஷ்பேசன்கள், பைப்புகள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.