அந்தமான் நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

அந்தமான் நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-08-11 02:16 GMT

அந்தமான் நிகோபார்,

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலை 2.56 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீட்டர் என்றும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

 

Tags:    

மேலும் செய்திகள்