மேற்கு வங்காளத்தில் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற ராகுலின் நியாய யாத்திரை
தேர்வு காரணமாக, மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற ராகுலின் நியாய யாத்திரையில் மைக் மற்றும் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.;
பிர்பூம்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் முதல் மும்பை வரை 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' மேற்கொண்டு வருகிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை, முர்சிதாபாத்தில் இருந்து பிர்பூம் மாவட்டத்திற்குச் செல்லும் வழியில் சில கட்டுப்பாடுகளுடன் இன்று காலை தொடங்கியது.
நியாய யாத்திரையானது, 20வது நாளான இன்று 2 மணி நேரம் தாமதமாக, முர்சிதாபாத்தில் உள்ள நபகிராமில் இருந்து காலை 10.30 மணிக்கு தொடங்கியது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து முர்சிதாபாத் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், " 10ஆம் வகுப்பு தேர்வு காரணமாக, மைக் மற்றும் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும், வி.ஐ.பி நெறிமுறையின்படி, போதுமான பாதுகாப்பு வசதியுடன் யாத்திரையை அதன் பாதையில் செல்ல அனுமதித்தோம்" என்று கூறினார்.