ராஜஸ்தான் அருகே மிக்-29 ரக போர் விமானம் விபத்து

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2024-09-02 20:09 GMT

ஜெய்ப்பூர்,

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 29 ரக போர் விமானம் ராஜஸ்தானின் பார்மர் என்ற பகுதியில் உத்தராலி என்ற விமானப்படை தளம் அருகே வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் தரையில் விழுந்து தீப்பிடித்து எரியத்துவங்கியது. இதில் விமானி அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பியதாக கூறப்படுகிறது . இதில் யாருடைய உயிருக்கும் பாதிப்பு இல்லை. எந்தவொரு சொத்துக்கும் பாதிப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.

தகவல் அறிந்தமீட்பு படையினர் விபத்து நடந்த பகுதிக்கு சென்றுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட போதிலும், விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு விமானப் படை உத்தரவிடப்பட்டுள்ளது.

விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் பார்மர் மாவட்ட கலெக்டர் நிஷாந்த் ஜெயின், காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திர சிங் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இரவு நேரத்தில் நடந்த இந்த விபத்தால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்