வாலிபருடன் கள்ளக்காதல்: பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து ஊர்வலம் - வீடியோ வெளியாகி அதிர்ச்சி
வாலிபர் ஒருவருடன் நெருக்கமாக இருந்ததால் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து தெருவில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.;
கரோ ஹில்ஸ்,
ஒரு பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து சென்று தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவியது. போலீசாரின் விசாரணையில் இந்த சம்பவம் மேகாலயா மாநிலம் கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள லோயர் டெக்சாக்ரே என்ற கிராமத்தில் நடந்தது தெரியவந்தது.
20 வயதிலேயே குழந்தையுடன் தனிமையில் வாழ்ந்து வந்த அந்த பெண், வாலிபர் ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இது ஊர்காரர்களுக்கு தெரியவந்தது. இதனால் கிராமத்தில் உள்ள ஓரிடத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறி உள்ளனர்.
அப்போது உறவினர்கள் 4 பேர் சேர்ந்து அந்த பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து தெருவில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் நடுரோட்டில் பலருக்கு முன்பாக வைத்து சிலர் தடிகளால் அந்த பெண்ணை தாக்கி உள்ளனர். இதுபற்றிய காட்சியே சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணை தாக்கிய அவரது உறவினர்கள் 2 பேரை கைது செய்தனர். மற்ற 4 பேர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.