மைதானத்தில் நடைபயிற்சி: ஐஏஎஸ் தம்பதி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை - பாஜக எம்.பி.

டெல்லியில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் தம்பதிகளுக்கு மேனகா காந்தி ஆதரவு தொிவித்துள்ளாா்.

Update: 2022-05-28 19:41 GMT

புதுடெல்லி,

டெல்லியில் ஐஏஎஸ் தம்பதிகளான சஞ்சீவ் கிர்வார் மற்றும் அவரது மனைவி அனு துக்கா தங்கள் செல்லப்பிராணி நாயுடன் தியாகராஜ் ஸ்டேடியத்தில் நடைபயிற்சிக்கு சென்றனர். நடைபயிற்சி செய்யவேண்டும் என்பதற்காக ஸ்டேடியத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த வீரர், வீராங்கனைகள் முன்கூட்டியே கட்டாயப்படுத்தி மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஐஏஎஸ் தம்பதியை இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சஞ்சீவ் கிர்வார் லடாக்கிற்கும், அவரது மனைவி அனு துக்கா அருணாச்சலப்பிரதேசத்திற்கும் இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் தம்பதிகளுக்கு பாஜக எம்.பி. மேனகா காந்தி தனது ஆதரவை தொிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், எனக்கு சஞ்சீவ் கிர்வாரை நன்றாகத் தெரியும். அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை. அவரது பணியிட மாற்றம் டெல்லிக்கு இழப்பு. அவா் சுற்றுச்சூழல் துறையின் செயலாளராக இருந்தபோது, அவரது பணியால் டெல்லி பயனடைந்தது. அவர் மீதான நடவடிக்கை முற்றிலும் தவறானது என்று அவர் தொிவித்தாா்.

மேலும் அவா் கூறுகையில், லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவை தண்டனை பெற்று செல்லும் இடங்கள் இல்லை. அந்த பகுதிகளுக்கும் நல்ல அதிகாரிகள் தேவை. மக்கள் (அதிகாரிகள்) அந்த பகுதிகளுக்கு மகிழ்ச்சியாக செல்கின்றனர்' இவ்வாறு அவா் தொிவித்தாா்.

Tags:    

மேலும் செய்திகள்